ஸ்ரீராமஜெயம்
மஹாராஜா தசரதன் செய்த யாகத்தின் பலனாய்,
அன்னை கோசலையின் மணி வயிற்றில் உதித்து,
ரகு குலத்திற்கு பெருமை அளித்து,
வில் வித்தை, வாள் வித்தை கற்றுத் தேர்ந்து,
யாகத்தை முனிவருக்கு முடித்து கொடுத்து,
அகலிகையின் சாபத்தைப் போக்கி,
சிவதனுசை வளைத்து, ஒடித்து நங்கை சீதையைக் கைப்பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மறவுரமான்தோல் தரித்து,
மனையாள் சீதையும், சகோதரன் இலக்குவனும் பின் தொடர, வனம் சென்று,
குஹனின் உதவியால் ஆற்றைக் கடந்து,
சித்திர கூடம் தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து, ராஜ்ஜியத்தை ஆளச் செய்து,
அகோர சூர்ப்பனகையின் மூக்கை அறுக்க வைத்து,
மாய மானான மாரீசனை கொன்று,
சீதையைப் பிரிந்து, மனம் தளர்ந்து,
சுக்ரீவனுடன் நட்புக் கொண்டு,
வாலியை வைத்து ஜடாயூவிற்கு மோட்ஷம் அளித்து,
விளையாட்டாகக் கடலைத் தாண்டச் செய்து,
அனுமனுக்கு அநுக்கிரஹ பலம் அளித்து,
அழகான வனத்தில் இருந்து சீதையிடம் கணையாழியை கொடுத்துவிட்டு,
இராவணனைக் கண்டு, இலங்கையை எரித்துவர, அலைக்கடலில் அணைகட்டி,
பரிவாரங்களுடன் இலங்கை சென்று, இராவணனை வென்று, வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு.
பிரிய சீதை, சகோதரன் இலக்குவணனின் தாசன் அனுமனுடன் அயோத்தி வந்தடைந்து,
ஆவலுடன் காத்திருக்கும் அனைவருக்கும் ஆசிகளை வழங்கிவிட்டு,
தாயார்களின் பொற்பாதங்களைப் பற்றி வணங்கிய
மஹானுபாலன் ஸ்ரீராமனை நான் வணங்கி பூஜிக்கிறேன்....
*ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் * ஸ்ரீராமஜெயம் *